ஜாகிர் நாயக் நடத்தும் அமைப்பு வெளி நாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு மாறாக இந்த அமைப்பு இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், முதல் கட்ட விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நன்கொடைகளைப் பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு எந்த பணத்தையும் விடுவிக்கும் முன்பாக தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:
Write comments