Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 24, 2017

மதத்தின் பெயரால் பைத்தியக்காரத்தனம்..! - வீடியோ


 ஜார்ஜியா நாட்டில் ஞானஸ்தானம் கொடுக்கிறோம் என்கிற‌ பெயரில் குழந்தையை துன்புறுத்தும் வீடியோ அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டின் தலைநகரான டிபிலிஷில் அமைந்துள்ள ஜியோர்ஜியன் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தில் குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 750 குழந்தைகள் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சி முற்றிலும் கொடூரமானது என்றும் வெட்ககேடானது, வன்முறையான ஒன்று என விமர்சனக்ஙள் எழுந்துள்ளது. காரணம் பச்சிளம் குழந்தையை பேராயர் கையாண்ட விதமே இதற்கு சான்று.

கிறிஸ்த்துவ முறைப்படி ஞானஸ்தானம் எடுக்கும்போது தண்ணீருக்குள் மூழ்கி எழுவது வழக்கம். ஆனால் இங்கு ஞானஸ்தானம் எடுப்பது குழந்தைகள் என்பதால் அவர்களை தேவாலயத்தின் பாதிரியாரே தண்ணீருக்குள் மூழ்க வைத்தார். ஆனால் குழந்தைகளை மிகவும் கொடூரமாக கையாண்டுள்ளார். தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள ஒரு பெரிய அண்டாவுக்குள், குழந்தையை இறுக்க‌ பற்றிக்கொண்டு அதன் தலை மற்றும் காலினை மாறி மாறி உள்ளே மூழ்கவைத்துள்ளார்.

இதனால் அந்த குழந்தை தடுமாறி அச்சத்தில் அழுதுள்ளது. அதுவும் மிக வேகமாக இந்த வேலையை அவர் செய்ததால், இந்த சம்பவம் சுற்றியிருப்பர்வர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியதை அடுத்து, புனித நிகழ்வான ஞானஸ்தான நிகழ்வை இவ்வாறு நடத்திய பாதிரியாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic