Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 29, 2017

அரபு ஊடகங்களிலும் வெளியாகிய மாட்டிறைச்சி விவகாரம்


மாட்டிறைச்சி விவகாரம் இந்தியாவையும் தாண்டி உலக ஊடகங்களிலும் செய்தியாய் பரவி வருகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மாட்டிறைச்சி தொடர்பாக தள்ளுபடி செய்த வழக்கு தொடர்பாக சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வம் செய்தி நிறுவனமான 'அராப் நியுஸ்' இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

பசுவைதை தடைச் சட்டம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளது. அந்த மா நிலங்களில் மாடுகளை கொன்றாலோ அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கொடுக்கும் அளவிற்கு சட்டங்கள் அமலில் உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் இச்சட்டம் அமலில் உள்ளது. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயம் எனவே இதில் உச்ச நீதிமன்றம் எந்த விதத்திலும் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் இந்துக்குளில் ஒரு சாரார் மாடுகளை தெய்வமாக வணங்கி வருகின்றனர். இதனால் மாடுகள் கொல்லப்படக்கூடாது என காலங்காலமாக கருதி வருகின்றனர். அதே சமயத்தில் உலகிலேயே மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்தால் நாட்டிற்கு 1.25 பில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்போம் என பா.ஜ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால் அதனை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

அதே சமயம் இன்னும் பல மா நிலங்களில் மாட்டிறைச்சி காரணமாக பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

http://www.arabnews.com/node/1045256/world

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic