வாயைத் திறந்தாலே மத துவேஷப் பேச்சுதான் என்ற அளவுக்குப் போய் விட்டார் ஹெச் ராஜா. இதோ இப்போது கூட தேவையில்லாமல் தனது பேச்சுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியை இழுத்து அவரிடம் வாங்கி கட்டிக்கொண்டார் ஹெச் ராஜா. பா.ஜ.கவின் ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் ஜல்லிக்கட்டு போராட்டக் களத்திலிருந்து விலகுவதாக அறிவித்த இசையமைப்பாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து ஒரு பதிவை போட்டிருந்தார்.
அதில்,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் பிரிவினைாதிகள், முஸ்லிம்
அடிப்படைவாதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதை ஆதி தெளிவாக
சொல்லி விட்டார் என போட்டிருந்தார்.
Sir.
This is wrong. I came out because some ppl are using my name Wrongly in
such posters. The youngsters will continue until victory
twitter.com/H RajaBJP/statu…
இதற்கு
ஆதி நெத்தியடியாக பதிலளித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதில் டிவீட்டில்,
சார், இதெல்லாம் தப்பு. எனது படத்தை சில போஸ்டர்களில் சிலர் தவறாகப்
பயன்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன். போராட்டம் வெற்றி பெறும் வரை
இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று கூறியிருந்தார் ஆதி.

No comments:
Write comments