Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 26, 2017

குவைத்தில் இளவரசர் உட்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்



குவைத்தின் அரசு குடும்பத்தைச்சேர்ந்த இளவரசர் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 7 நபர்களுக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இத்தகவலை குவைத் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குனா ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.

குவைத் மற்றும் பல வலைகுடா நாடுகளில் கொலைக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் அமலில் உள்ளது. அதன் அடிப்படையில் கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் குற்றங்கள் நிரூபணமான பின்னர் பாரபட்சமின்றி மரண தண்டனை நிறைவேற்று சட்டம் குவைத் நாட்டில் இருந்துவருகிறது.

நேற்றை தினம் குவைத் நாட்டு பிரஜைகள் இருவரும், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் எதியோப்பியாவைச்சேன்ர்த 4 நபர்களுக்கு ஒரே இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குவைத்தில் முதன் முறையாக அரசு குடும்பத்தைச்சேர்ந்த ஒரு இளவரசருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஷேக் பைசல் அப்துல்லா அல் சபா என்ற அந்த இளவரசர் தனது குடும்பத்தினர் ஒருவரை கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறு ஒன்றில் சுட்டு கொலை செய்திருக்கிறார். அதே போல் குவைத் நாட்டின் பிரஜையான நுஸ்ரா அல் எனேஜி என்ற பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் 2009ஆம் ஆண்டு தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்திற்காக ஆத்திரம் கொண்டு தனது கணவரின் திருமணம் நடைபெற்ற கூடாரத்திற்கு தீ வைத்துள்ளார். இச்சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 57 பேர் இறந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவர் தனது முதலாளியில் மகளை கொன்ற குற்றத்திற்காகவும், எதியோப்பியா நாட்டைச்சேர்ந்த பெண் தனது முதலாளியின் குடும்பத்தினர் ஒருவரை கொன்ற குற்றத்திற்காகவும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வங்கதேசத்தைச்சேர்ந்த ஒருவர் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும், எகிப்து நாட்டைச்சேர்ந்தவர்களின் செய்த கொலை குற்றத்திற்காகவும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குவைத் நாட்டில் கடந்த 1960ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை அமலில் உள்ளது. இன்று முதல் இன்று வரை குவைத் நாட்டில் மட்டும் மொத்தம் 80 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இன்னமும் 50 நபர்கள் வரை மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic