Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 25, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு பீட்டாவின் கிரிமினல்தனம்...


விலங்கு நலன் பாதுகாப்பு அமைப்பாக கூறிக் கொண்டு கியுப்பா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. பீட்டாவிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பதால் கியுப்பா என்ற பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.




டெல்லி: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கியுப்பா என்ற விலங்கின அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருப்பதால் கியுப்பா என்ற வேறொரு விலங்கின அமைப்பின் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்காமலேயே பொங்கல் திருவிழா கழிந்தது. அதனால் இந்த ஆண்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் மாணவர்கள் புரட்சி போராட்டத்தை நடத்தினார்கள். இதன் விளைவாய் தமிழக அரசு முதலில் அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர் நிரந்த சட்டத்துக்காக தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

CUPA files a case against Jallikattu Law
இதனையும் எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு முதலில் பீட்டா சார்பாக தாக்கல் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கியுப்பா என்ற அமைப்பே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கியுப்பா என்ற இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் கியுப்பா அமைப்பின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீட்டா அமைப்பைப் போன்றே கியுப்பா அமைப்பும் விலங்குகள் தொடர்பாக செயல்பட்டு வருகிறதாம். எந்தப் பெயரிலாவது வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தி விடலாம் என்று மூர்க்கத்தனமாக செயல்பட்டு வரும் பீட்டாவை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப் மாட்டார்கள். பீட்டாவாக இருந்தாலும் சரி கியுப்பாவாக இருந்தாலும் சரி தமிழகத்திற்கு இடம் இல்லை என்று உறுதியாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic