சென்னை எழும்பூர் ராஜரத்தின் மைதானம் அருகே நடைபெற்ற இப்பேரணியில் நடிகர் சங்கத்த தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குனர்கள் ரமேஷ் கண்ணா, நடிகர் சத்தியராஜ் நாம் தமிழக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வேலூரிலிருந்து சென்னை வரை நடைபெறுவதாக இருந்த இப்பேரணிக்கு போலிஸார் அனுமதி வழங்கவில்லை. வேறு விதமாக போராட்ங்களை நடத்திக்கொள்ளுங்கள் என காவல்துறையினர் கேட்டு கொண்டதற்கினங்க சென்னை ராஜ ரத்தினம் மைதானத்திலிருந்து பேரணி துவங்கியது. இப்பேரணிக்கு தலைமை வகித்த பேரறிவாளனின் தாயார் செய்தியாளர்களிடத்தில் கூறும்போது "எனது மகன் பேரறிவாளன் உட்பட 7 நபர்களும் குற்றமற்றவர்கள். அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இருமுறை நடவடிக்கை எடுத்த போதும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இம்முறை மீண்டும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை இது தொடர்பாக வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறுகிறது. எனது மகன் 19 வயதில் சிறைக்குச்சென்றான். தற்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலத்தில் ஒருமுறை கூட பரோலில் வெளிவரவில்லை. 25 ஆண்டுகால சிறை வாழ்க்கை எனது மகனின் இளமையை சீரழித்துவிட்டது. அவன் நிரபராதி, ராஜிவ் கொலை வழக்கில் அவன் ஈடுபடவில்லை என்பது இன்று உலகறிந்த உண்மையாகிப்போனது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர முதல்வரால் மட்டுமே முடியும் என்பதால் அவரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன் என்று கூறினார்.
இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:
Write comments