Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

அமெரிகாவின் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்த வேண்டும்


பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் ஆளில்லா விமான மூலம் தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்காவின் விமானங்களை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹபீஸ் செய்யது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் இருப்பதாக கூறி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த தாக்குதல்களில் தீவிரவாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இத்தகைய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துவருகிறது. பாகிஸ்தானின் இறையான்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

சமீபத்தில் ஆளில்லா விமான மூலம் தாலிபான் தலைவர் முல்லா மஹ்மூத் அன்சார் கொல்லப்பட்டார். இதனை அடுத்து பாகிஸ்தானில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் ஹபீஸ் செய்யது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் அரசு சுட்டு வீழ்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்தியாவுடன் நட்புறவு மேற்கொள்வதில் பாகிஸ்தானிற்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பாகிஸ்தானின் இறையான்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தால் அவற்றை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


ஹபீஸ் சயீத் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு முக்கிய சதிகாரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic