Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

இளங்கோவனை கண்டித்து சென்னையில் பா.ஜ.க நடத்திய ஆர்பாட்டம்


பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கண்டித்து சென்னையில் பா.ஜ.கவின் இளைஞர் அணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழை சவுந்த்தராஜன் பேசியதாவது,

கட்சியின் கொள்கை ரீதியாகவும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வைக்கப்படும் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம் ஆனால் இளங்கோவன் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது என்பது நாட்டையே கொச்சைப்படுத்துவதற்கு சமம் என்றார்.

மோடிக்கு விசா கொடுக்க மறுத்த நாடுகள் எல்லாம் தற்போது போட்டி போட்டுக்கொண்டு மோடிக்கு விசா வழங்கி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அவர் பேசிய உரைக்கு அந்த நாடே பாராட்டி வருகிறது. ஆனா இளங்கோவன் மோடியை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணியையும் அவர் விட்டுவைக்கவில்லை. என்னைகூடா திமிழிசையா அல்லது தமிழ் வசையா? என்று அரசியல் நாகரீகம் தெரியாமல் இளங்கோவன் பேசி வருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி டெபாசிட் இழந்ததை பற்றி பேசுகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் டெபாசி இழந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். தைரியம் இருந்தால் காங்கிரஸ் கட்சியும் தனித்து நின்று போட்டி போட்டு தங்களது இருப்பை காட்டட்டும் என்று பேசினார்.

ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இளங்கோவனக்கு எதிராக கோஷமிட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic