கர்நாடகாவில் கம்பாலாவிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா எனும் எருதுகளின் பந்தயத்திற்கு கடந்த ஆண்டு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கம்பாலா போட்டிக்கு விதிக்கபப்ட்ட தடையை நீக்க கோரியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஹூப்ளியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் கம்பாலா போட்டிக்கு அனுமதி அளிக்க கோரி கர்நாடகாவில் நாளை பெரிய அளவில் போராட்டம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments