சிரியா, ஈராக், லிபியா, சோமாலியா, ஈரான், சூடான் மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளின் அகதிகள், சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தடைவிதித்தார். இந்த தடைக்கு சியாட்டிலில் இருக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு தடையும் விதித்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் புதிய தடை ஆணையை பிறப்பிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர திட்டம் வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்த புதிய தடையாணை நாளை அல்லது நாளை மறு நாள் பிறப்பிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. டிரம்பின் இந்த அதிரடி பேச்சின் மூலம் தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார்.
No comments:
Write comments