ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் மாறன் சகோதரர்கள் உடனே சிறையிலடைக்கப்படுவர்.
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தால் தயாநிதி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் உடனே டெல்லி திகார் சிறையிலடைக்கப்படுவர்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தயாநிதி, கலாநிதி, அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி தயாநிதி, கலாநிதி, காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இன்று மாலை 4 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி கூறியுள்ளார்.
தயாநிதி உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி ஓபி ஷைனி தள்ளுபடி செய்தால் அனைவரும் உடனே நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவர். திகார் சிறையில் இருந்தபடியேதான் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலைஞர் டிவி ஆதாயமடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உடனே அவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபப்ட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி

No comments:
Write comments