மும்பை: பட்ஜெட் 2017 சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே பங்கு வர்த்தகம் சாதகமான நிலைக்கு மாறியுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சென்செக்ஸில் 482 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்து கைமாறியது.
நேற்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பண ஒழிப்பு காரணமாக நாட்டின் மொத்த உற்பத்தியில் லேசான சரிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதே போல தொழில் துறை வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
எனவே நாட்டின் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 27673 புள்ளிகளில் முடிந்தது. இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டவுடன் 27721 புள்ளிகளாக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் 483 புள்ளிகள் உயர்ந்து 28,138 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீடு 155 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில் 8,719 புள்ளிகளாக நிலை பெற்றது. உள் கட்டமைப்புத் துறைப் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சிட்டி

No comments:
Write comments