சென்னை மெரினா வன்முறை தொடர்பாக, பிப்ரவரி 8ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணையை தொடங்குகிறார். அவர் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் பகுதி மக்களை நேரில் சந்தித்து வன்முறை குறித்து விசாரிக்கவுள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக சென்னை மெரினாவில் நடைபெற்ற தடியடி சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சட்டசபையில் பேசுகையில், சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம் விசாரணை செய்து 3 மாதங்களில் அரசிடம் அறிக்கை வழங்கும். அதன்பேரில், தகுந்த நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி எடுக்கப்படும். வன்முறைச் சம்பவத்தில் தீ வைத்த காவலர் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Write comments