இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவை எப்படியாவது அழைத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வைக்கலாம் என பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
அழைப்பை ஏற்று அங்கு சென்றால், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது, நம்மை நம்பி வந்த ஆதரவாளர்களும் புறக்கணிப்படுவார்கள் என தீபா சந்தேகிக்கிறார்.
ஒருபுறம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்பதிலும் தீபா உறுதியாக உள்ளார். இதனால் பன்னீர்செல்வத்துடன் தீபா இணைவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆதரவாளர்களிடம் கருத்து கேட்பதற்காக தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்களை தீபா நேற்று அழைத்திருந்தார். அவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பன்னீர்செல்வம் விடயத்தில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் தீபா கடும் குழப்பத்தில் உள்ளார்.
No comments:
Write comments