Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 12, 2017

முன்னாள் விடுதலைப்புலி தளபதி புதிய கட்சியை துவங்கினார்


இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணை அமைச்சரான கருணா அம்மான் என்று அழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஒன்றை துவக்கியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனி என்று அந்த கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தொடக்கவிழா நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கட்சியை தொடங்கி வைத்து பேசிய கருணா "தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி தமஹ்டு கட்சியின் செயல்பாடுகள் அமையும். 13வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாவட்டங்கள் இணைந்ததாகவே இருக்க வேண்டும் என்றார்.

தற்போதைய சூழ் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை புத்திசாலித்தனமா கையாள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமது கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். கருணா என்ற முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்தவர். பிராபகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2004ஆம் ஆண்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து மஹிந்த ராஜபக்சேவுடன் இணைந்தார். இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வேட்டையாட உதவி புரிந்தார். இதன் காரணமாக அவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்து தனது அமைச்சரவையில் வைத்திருந்தார்.

பின்னர் ஸ்ரீசேனா அரசு பதவியேற்றதும்,  கருணா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டதால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கன்வே கருணா லண்டனுக்கு 2007ஆம் ஆண்டு வந்தபோது அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜாமினில் இருக்கும் கருணா புதிய கட்சியை துவங்கியிருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic