Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 14, 2017

கனகச்சிதமாக காயை நகர்த்தும் திமுக‌


தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகளை பயன்படுத்தி, ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்தை மறைமுகமாக கையாண்டு வருகிறது திமுக.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் என யாருமே, அதிமுவிற்குள் நடைபெறும் மல்லுக்கட்டு குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தயாராக இல்லை. ஆனால் கனகச்சிதமாக மத்திய அரசுடன் மிக ரகசிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது திமுக.

மேலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு திமுகவால் தான் தீர்வு அளிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இந்நிலையில் பா.ஜ.கவின் முன்னாள் தேசியத் தலைவராகவும் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் முக்கியப் புள்ளியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

தி.மு.கவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஒருவர், இந்த சந்திப்பில் பா.ஜ.கவின் விருப்பங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தென்மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் 12 தொகுதிகளை அடையாளம் காட்டுகிறோம். அதில் 5 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தி.மு.கவால் தீர்வைக் கொடுக்க முடியும். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அழைத்தால், அ.தி.மு.கவின் கணிசமான எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள். எளிதாக எங்கள் பலத்தை நிரூபிக்க முடியும்' என விவரித்திருக்கிறார்.

அ.தி.மு.க சிதறி இருப்பதால், தி.மு.கவை பலம் பொருந்திய கட்சியாக அவர்கள் பார்க்கிறார்கள். அதை மனதில் வைத்துத்தான் கனிமொழி வெளிநாடு செல்ல சி.பி.ஐ விதித்திருந்த தடையை நீக்கினார்கள். திமுக-வும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic