Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 1, 2017

ஹோட்டல் சரவண பவனை இழுத்து மூடிய அதிகாரிகள்!


சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன்  நிருவனம். ருசிக்கும் விலைக்கும் பெயர் பெற்றவை இந்த ஹோட்டல். இதன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை சென்ற பிறகும் சரவண பவன் ஹோட்டல்களின் மவுசு குறைந்தபாடில்லை. இந்நிலையில் இன்று தீடீரென சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள அதன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை சீல் வைத்து இழுத்து மூடினர்.

அதே போல 9 கிளை ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரே நாளில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic