தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக திரைப்பிரபலங்கள் உட்பட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கூறிவந்தனர்.
மேலும் ஒரு சிலர் தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டதாக கூறிவந்தனர். மேலும் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், அப்போலோ மருத்துவமனையின் குழும தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டியும் நாளை மதியம் தனித்தனியே பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்களை வெளியிட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இன்னும் சில தினங்களில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் நிலையில், பலரும் அவர் தான் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார் என்று கூறிவருகின்றனர்.
அதனால் மருத்துவர் பிரதாப் ரெட்டி மற்றும் ரிச்சர்ட் பீலே இருவரின் நாளைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Write comments