அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறவித்துள்ளனர். ஆனால், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 10 கோடி அபராதம், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்திருந்த தீர்ப்பின் படி ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Write comments