Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Mar 2, 2017

குழந்தைகள் கடத்தி விற்பனை - பா.ஜ.க. மகளிரணி தலைவி கைது

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. மகளிரணி தலைவி உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேற்கு வங்காளம் மாநிலம் - நேபாளம் எல்லைப்பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை சேர்ந்த மூன்று பேரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவயது முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

கொல்கத்தா நகரின் புறநகர் பகுதியான பேஹாலா மற்றும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டம் சேர்ந்த சில நர்சிங் ஹோம் மற்றும் வீடுகளில் சி.ஐ.டி, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த தொழிலுக்காகவே தொண்டு நிறுவனம் என்ற பெயரில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்றுவந்த சோனாலி மொண்டல், சந்தனா சக்ரபார்த்தி, மனாஸ் போவ்மிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அனாதை குழந்தைகளை தத்து கொடுப்பதுபோல் போலியாக ஆவணங்களை தயாரித்து, பல இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 குழந்தைகளை இவர்கள் விலைக்கு விற்ற தகவல் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக குற்றச்சாட்டின் பேரில் நேபாளம் - மேற்கு வங்காளம் மாநிலம் எல்லைப்பகுதி அருகே வசித்துவரும் பா.ஜ.க. மகளிரணி தலைவி ஜுஹி சவுத்ரி என்பவரை நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், கைதாகியுள்ள ஜுஹி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், தவறு செய்திருப்பது உறுதிபட தெரியவந்தால் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூர்தர்ஷனில் முன்னர் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ தொடரில் ‘திரெளபதி’ கதாபாபாத்திரத்தில் நடித்த ரூபா கங்குலிக்கும் இந்த குழந்தை கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.



மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ரூபா கங்குலியும் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான மகளிரணி தலைவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic