வியட்னாமுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில், அந்த நாட்டின் பாதுகாப்புச் செலவுகளுக்காக 50 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,340 கோடி) கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
தனது வியட்னாம் சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதவிர, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, இணையப் பாதுகாப்பு, கடற்படைத் தகவல் பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் 12 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை வியட்னாம் சென்றார். வியட்னாமில் அந்நாட்டு பிரதமர் குயென் ஸூவான் பக்-கை சனிக்கிழமை நேரில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்திய மோடி, பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இந்தியாவுக்கும், வியட்னாமுக்குமிடையே இதுவரை இருந்து வந்த பாதுகாப்பு நட்புறவை, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பாதுகாப்புக் கூட்டுறவாக மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். வருங்கால ஒத்துழைப்பை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, வியட்னாமுக்கு இந்தியா 50 கோடி டாலர் கடனுதவி அளிக்கவிருக்கிறது.
இதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள 12 ஒப்பந்தங்கள், பல்வேறு துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதைப் பறை சாற்றுகின்றன. வியட்னாம் கடலோரக் காவல் படைக்காக, கண்காணிப்புக் கப்பல்களை இந்தியா கட்டித் தருவதற்கான ஒப்பந்தம், இருதரப்புப் பாதுகாப்பு நல்லுறவை மேலும் பலப்படுத்தும்.
வியட்னாம் பிரதமர் குயென் ஸூவான் பக்-உடனான எனது சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்தப் பிராந்தியத்தின் இரு பெரிய நாடுகளான இந்தியாவும், வியட்னாமும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பொதுப் பிரச்னைகளை எதிர்கொள்ள, தங்களுக்கிடையிலான நட்புறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இரு நாடுகளின் கூட்டு முயற்சி, பிராந்தியப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கும்.
இந்தியாவிலும், வியட்னாமிலும் உள்ள பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இரு நாடுகளுமே வளர்ச்சியடைய முடியும். இந்தியாவில் தொழில் புரிவதற்காக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் பயன்படுத்தி, வியட்னாம் நிறுவனங்கள் பலனடையலாம். வேளாண்மையை நவீனமயமாக்குதல், தொழில்முனைவை ஊக்குவித்தல், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி காணுதல், பொருளாதார வளர்ச்சிக்கான தொழில் வளத்தைப் பெருக்குதல் போன்றவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வியட்னாம் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சிக்குக் கைகொடுக்க, இந்தியாவும், அதன் 125 கோடி மக்களும் தயாராக உள்ளோம்.வரலாற்றுப் பிணைப்பு, பூகோல அமைப்பு, கலாச்சார இணைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவிடம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஏசியன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வியட்னாம் உதவும் என்றார் பிரதமர் மோடி.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இந்தியாவும், வியத்நாமும் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து இருநாடுகளும் சனிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்தர மற்றும் தாற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்னாம் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டுமைப்பில் இந்தியா இணைவது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:
Write comments