Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Mar 3, 2017

ஆர் எஸ் எஸ்ஸுக்கெல்லாம் போய் நான் அஞ்சுவேனா.. பினராயி அதிரடி!

சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளாகவும், அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

ருவனந்தபுரம் : சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளாகவும், அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ் - க்கு பதிலடி கொடுத்துள்ளார்.



பினராயி விஜயன் பொறுப்பேற்றது முதல் கேராளாவில் ஆர் எஸ் எஸ் , பாஜக தொண்டர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகின்றன.

இதனை கண்டிக்கும் விதமாக மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக இருக்கும் குந்தன் சந்திரவாத் என்பவர் , இன்று கேராளாவில் நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சந்திரவாத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பினராயி விஜயன், ஏற்கனவே பலரது தலைகளை சங்பரிவார் அமைப்புகள் எடுத்துள்ளது என்றும் அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயளாலர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், சந்திரவாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆர். எஸ். எஸ் அமைப்பு ஒரு மாநில முதல்வருக்கே மிரட்டல் விடுக்கிறது. 

இதிலிருந்து மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு மற்றும் உதவிகளை அந்த அமைப்பு பெற்றுக் கொள்ளும் என தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது என்றார். 

அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , ஆர். எஸ். எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை தெரிவித்தருந்தார். இதனால் தான் சந்திரவாத் சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic