நெடுவாசல் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: நெடுவாசல் போராட்டக் களத்தை பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே விமர்சனம் செய்வதற்கு பயன்படுத்தவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல தரப்பட்ட மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுவிய பிரிவினைவாத சக்திகள் மீண்டும் நெடுவாசலில் இளைஞர்கள், மாணவர்கள் இடையே புகுந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நெடுவாசல் போராட்டம் திசை திரும்பி செல்வதாகவும், இந்த பிரிவினைவாத சக்திகளை அடக்க தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எச்.ராசா கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் நக்சலைட்டுகளும் ஊடுருவி பொதுமக்களை குழப்புவதாகவும், ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த காங்கிரஸ் மற்றும் திமுகவை யாரும் விமர்சிப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் விரும்பவில்லை என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்றும் எச்.ராஜா உறுதிப்பட கூறியுள்ளார். நெடுவாசல் போராட்டத்தை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி, அதில் பங்கேற்றுள்ள சிலர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிப்பதாகவும் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Write comments