Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Apr 27, 2016

மரியாதையா பேசு! நான் பத்து பேரை சமாளிப்பேன் - சரத்குமார்

திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வனாதனை ஆதரித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான திரு சரத்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கே டீக்கடையில் இருந்து ஒரு நபர் சரத்குமாரை நோக்கி விமர்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்த சரத்குமார் "கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் அதிமுகவின் ஆதரவு அலை வீசி வருகிறது. வருகின்ற சட்டமன்றதேர்தலிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. நாங்கள் மக்களிடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேட்போம்" என சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கே டீக்கடையில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் சரத்குமாரை நோக்கி ஏதோ விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கேட்ட சரத்குமார் கடும் கோபம் கொண்டு வேனை விட்டு கிழே இறங்கி டீக்கடையில் நின்றுகொண்டிருந்த அந்த நபரிடம் சென்று " நீங்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம், நான் ஒரு ஆள் பத்து பேரை சமாளிப்பேன், மரியாதையாக பேசு தேர்தல் நேரமாக இருப்பதால் அமைதியாக திரும்பி போறேன்." என்று அந்த நபரை மிரட்டினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic