தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 232 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. கடந்த நாட்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மேகமூட்டத்துடன் மிதமான வானிலை தொடர்வதால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வருகிறது. வாக்களர்கள் இருசக்கர வாகனங்களில் குடையை பிடித்துக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின்சாரம் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரம் தொகுதியில் மின்சாரம் துன்டிக்கப்பட்டதால் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் செப்போனில் உள்ள டார்ச்சை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள். மாவட்ட மின்சாரவாரியத்திற்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்னும் சில இடங்களில் ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால் வயதானவர்கள் மிகுந்த சிறமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் சில பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவே நடந்து வருகிறது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியும் காணப்படுகிறது.

No comments:
Write comments