ஒரு மனிதனிடம் பொய் சொல்லி அவனை சுலபமாக நம்பவைத்துவிடலாம்!
அதே மனிதனிட உண்மை, எதார்த்தம் இவற்றை எடுத்துக்கூறி புரியவைப்பது மிகக்கடினம்!
இதுவே தமிழக மக்களின் மனமாகவுள்ளது. எத்துனையோ அரசியல் தலைவர்கள் நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்தி, சிறைச்சாலை சென்று நித்தம் நித்தம் போராட்ட குணத்தை தன் தொண்டர்களுக்கு ஊட்டி வளர்த்து வந்தும் தேர்தலி தோல்வியை பெறுகினர். அதே சமயம் இதில் எதையுமே செய்யாது, மக்கள் பிரச்சனைகளுக்கு வீதியில் இறங்கி போராடதவர்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்காதவரகள், சினிமாவில் நடித்ததன் மூலம் பிரபலமாகி ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என பெரிய கட்சிகள் வீசும் எழும்பு துண்டுக்காய அழைந்து, காக்காய் பிடித்து தேர்தல் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வைக்கப்படுகிறார்கள்.
தமிழக மக்களின் மனநிலைதான் என்ன...? புரியாத புதிராகவே இருக்கிறது! தலித் சமூகத்தின் விடுதலைக்காக நித்தம் நித்தம் குரல் கொடுத்துவரும் மாபெரும் தலைவன் தொல் திருமாவளவன் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போயுள்ளார். எந்த போராட்ட பின்புலமும் இல்லாத நடிகர் கருணாஸ் அதிமுகவின் ஆசியால் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கருணாஸ் அப்படி மக்களுக்கு என்ன செய்துவிட்டார் என்பதும் தெரியவில்லை, திருமாவளவன் என்ன செய்ய தவறிவிட்டார் என்பதும் தெரியவில்லை, தமிழக மக்களின் நிலைதான் என்ன? என்பதும் புரியவில்லை.
2011ஆம் ஆண்டும் ஆட்சியைவிட்டு இறங்கிய திமுக தமிழ்நாட்டிற்காக வைத்துவிட்ட கடன் 80ஆயிரம் கோடி. 2016ல் அதிமுக ஆட்சியை முடிக்கும்போது தமிழகத்தின் கடன் சுமை 2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இன்னும் 5 வருடத்தில் தமிழகத்தின் நிலை என்னவாகுமோ...?

No comments:
Write comments