அடுத்த மாதம் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தலைநகர் சென்னையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல்முனைபோட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள சிறு சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு அ.இ.அ.தி.மு.க அணி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது, அதே சமயம் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளை இணைத்க்கொண்டு போட்டியிடுகிறது.அதே சமயத்தில் தொடக்கத்தில் இந்த கூட்டணி நிலைநிற்குமா என்ற கேள்விக்குறி இருந்த போதும் நாளைடைவில் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சிக்கட்டிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக - தா.மா.க - மக்கள் கூட்டணி இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலகவே இருக்கிறது. மற்றொரு புரம் தேசிய கட்சியான பாரதீய ஜனதா பல முறை முயற்சி எடுத்தும் எந்த பிரதான கட்சியும் தங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள முன்வராத நிலையில் ஐ.ஜே.கேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இன்னொருபுறம் ஓபாமா ஸ்டைலில் மாற்றம் என்ற கோஷத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி வாசல்களை திறந்து வைத்த பா.ம.கவையும் யாரும் சீண்ட முன்வரவில்லை என்ற நிலையில் தனித்தே அக்கட்சியும் களம் காண்கிறது. இவ்வாறாக தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பல்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் முடிவு கணிப்பாளர்கள் கூட இம்முறை எம்மாதிரியான முடிவுகள் வெளிவரும் என கணிப்பதில் திணறி வருகின்றன.
எது எப்படியோ தேர்தல் காலத்தில் மட்டும் "அதிகாரம் மக்களுக்கே" என்ற ரீதியில் மக்கள் யாரை ஆட்சி கட்டிலில் அமர்த்தப்படவேண்டும் என்ற அதிகாரம் வாக்களிக்கப்போகும் அந்த ஒரு நாளைக்கு மட்டும் மக்கள் அதிகாரட்திற்கு வருகின்றனர். அதன் பிறகு என்னவோ பெரும் பாடுதான். மக்கள் இம்முறை என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











No comments:
Write comments