முதலைமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இருக்கை வைக்கப்படிருந்ததால், திமுகவை அவமானப்படுத்தும் நோக்கில் ஜெயலலிதா இவ்வாறு செய்திருக்கிறார், ஜெயலலிதா திருந்தவும் இல்லை திருந்தப்போவதும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய விளக்கத்தை இன்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "அதிகாரிகள் நாற்காலிகளை பதவிகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தியுள்ளனர், ஸ்டாலின் விழாவிற்கு வருவார் என்பது எனக்கு முன்னரே அதிகாரிகள் அறிவித்திருந்தால், விதிகளை தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் அமர்வதற்கு வசதி செய்துகொடுத்திருப்பேன், விழாவிற்கு ஸ்டாலின் வந்தது மிக்க மகிச்சி, இதற்காக நான் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி திமுகவை அவமானப்படுத்தவேண்டும் என்றோ, அவர்களுக்கு உரிய இடமளிக்கக்கூடாது என்றோ நான் கருதவில்லை" என முதலைமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 89 இடங்களை வென்று திமுக அணி வலுவான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறது. விழாவில் பங்கெடுத்துவிட்டு தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்த ஸ்டாலின் கூறியதாவது, "முதலைமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றுவார் என நம்புகிறேன், தமிழக மக்களுக்கு நல்ல சேவையை ஆற்றுவார் என்றும் எதிர்பார்கிறேன். ஜெயலலிதாவிற்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடிருந்தார்.
எப்பொழுதுமே எதிர் எதிர் விமர்சனங்களை வைக்கும் இந்த இரு கட்சியினரிடையே ஒரு சுமூகமான பேச்சு ஏற்பட்டதை பார்க்கும்போது தமிழகத்தில் இனி வரக்கூடிய 5 ஆண்டுகளும் வித்தியாசமாய் நகரும் என்றே தோன்றுகிறது.
No comments:
Write comments