Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 29, 2016

கங்கை நதி தூய்மையாவது சாத்தியமா...?


2018ற்குள் கங்கை நதியை உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றாக மாற்றிடுவோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் நாடு முழுவதும் அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த உமா பாரதி கூறும்போது "உலகிலேயே மோசமான 10 நதிகளில் ஒன்றாக புனித கங்கை நதி உள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் கங்கையை தூய்மைப்படுத்த ரூபாய் 4000 கோடி வரை செலவிடப்பட்டும் நதியை சுத்தம் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது எங்களது அரசு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கங்கையை சுத்தம் செய்து உலகின் தூய்மையான 10 நதிகளில் ஒன்றாக அதனை மாற்றுவோம்" என்று உமா பாரதி பேசினார்.

இந்துக்களுக்கு கங்கை நதி புனிதமானதாகும். இந்நதியில் குளித்தால் செய்த பாவத்திலிருந்து விமோட்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்தோடுமட்டுமால இறந்த பிணங்களை அந்நதியில் விட்டுவிட்டாலும் விமோட்சனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் அவ்வாரு செய்கின்றனர். பிணங்களுக்கு எரியூட்டும் பழக்கமும் நதிக்கரையில் அதிகம் நடந்து வருகிறது. இதனால் கங்கை நதி மாசுமட்டு தூய்மையெற்ற நதிகளில் ஒன்றாக அது விளங்கி வருகிறது. இதனை தூய்மைப்படுத்த கோடிக்கணக்கில் பணமும் செலவிடப்பட்டு வருகிறது. பணத்தை வாரி இறைத்து அதனை சுத்தம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதே நிதர்சனம். அதனை மாசுப்படுத்துவதிலிருந்து தடுக்காத வரை எத்துனை கோடி செலவும் செய்தாலும் அது பலனளிக்காது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic