நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்று குற்றச்சாட்டை நாங்கள் இன்று முறியடித்திருக்கிறோம் என சிறுபான்மை நலத்துறை மத்திய அமைச்சர் நஜ்மா கெப்துல்லா தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க நிகழ்சி ஒன்றில் பங்கெடுத்த அமைச்சர் கூறும்போது "பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படுவார்கள் என்றும், சிறுபான்மை நலத்துறை நிர்வாகத்தை கலைத்துவிடுவார்கள் அல்லது அத்துறைக்கு ஒதுக்க வேண்டிய சலுகைகளை நிறுத்திவிடுவார்கள் என்று கடந்த பாரளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவின் எதிரிகள் பொய் பிரச்சாரம் செய்தனர்.
நான் இப்பொறுப்பை ஏற்று நடக்கும்போது இது எனக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்தது. ஆனால் மோடியின் திறமையான ஆட்சியின் மூலமாகவும், சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மூலமாகவும் பா.ஜ.க சிறுபான்வை விரோத கட்சி அல்ல என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். ஆட்சி துவங்கப்பட்ட நாள் முதல் சிறுபான்மை மக்களின் கல்விக்காகவ் பல்வேறு நலட்திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. மதரசாக்களில் பாடம் பயிலும் மாணவர்களுக்கென தனியாகவே நிதி ஒதுக்கப்பட்டு அது முறையாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது" என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சாதனைகளை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது.

No comments:
Write comments