வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் கொண்டவர்கள் ஏராளம். சினிமாவை வெரும் பொழுதுபோக்குக்காக பார்பது என்பதை தாண்டி அதில் நடிப்பவர்களையும், அதன் சம்பவங்களையும் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தி ஏமாறக்கூடய ஏமாளிகள் ஏராளம். நடிகர் நடிகைகளை தனது மானசீக சொந்தக்காரனாக பாவித்து அந்த நடிகருக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
ரசிகர்களின் இந்த ஏமாளித்தனத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தன்னை ஒரு மிகப்பெரும் சமூக சீத்திருத்தவாதியாக காட்டிக்கொள்கிறார்கள். சினிமாவில் வாய்ப்பு குறைந்தாலோ அல்லது வயது அடைந்து சினிமாவை விட்டு வெளியேறும் தருணம் ஏற்பட்டாலோ தன்னுடைய அந்த செல்வாக்கை பாதுகாத்துக்கொள்ளவோ அல்லது அதை விட பெரும் செல்வாக்கை ஏற்படுத்துவதற்காகவோ பெரும்பாலான சினிமாக்காரர்கள் தேர்ந்தெடுக்கும் துறைதான் அரசியல். இப்படியா சினிமா துறையிலிருந்து விலகி அரசியல் பிரவேசம் எடுத்த எத்துனையோ நடிகர் நடிகைகளை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது என்பது இன்று சர்வசாதரணமாகிப்போனது.
அந்த வகையில் இன்றைய தேதிகளில் சினிமாக்காரர்களக இருந்து அரசியல்வாதிகளாக மாறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்து தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளுக்காக அடிக்கும் ஜால்ராவை பார்க்கும் போது சகிக்க முடியவில்லை. இத்தகைய நிலையிலிருந்து தவிர்ந்து கொள்கைகளை எடுத்துக்கூறி மக்களுக்காக உண்மையிலேயே போராடும் குணம் கொண்ட அரசியல் கட்சிகள் ஒரு சில விதிவிலக்காக இருந்தும் ஏனோ மக்களின் அங்கீகாரம் பெருமளவில் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே வருத்தப்படக்கூடிய விஷயமாகும். மறைந்த துக்ளக் இதழின் ஆசிரியர் சோ அவர்களின் பத்திரிகை நிகழ்சியில் பங்கெடுத்த முன்னால் அதிமுக எம்.எல்.ஏ கூறியது நினைவுக்கு வருகிறது "நேருவும் காமராஜரும் வளர்த்த காங்கிரஸ் கட்சியை இன்று நக்மாவும் குஷ்புவும் வளர்க்க வேண்டியதாயிருக்கிறது".
சினிமா மோகத்திலிருந்து விடுதலை பெற்று, சினிமாவில் கதாநாயகனாக நடித்தார் என்ற ஒரே அங்கீகரத்திற்காக அவரை அரசியலிலும் அங்கீகரிக்கும் நிலை எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுதே தமிழகட்தில் நல்லாட்சி நடக்கும்.
-- புகழேந்தி

No comments:
Write comments