தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் வடக்கு கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மழை பதிவு:
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக, திருவெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில் வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
தென்மேற்கு வங்காள விரிகுடாவுக்கும் இலங்கை கடற்பகுதிக்கும் இடையே மே 14-ஆம் தேதி (சனிக்கிழமை) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், ஒரு சில நாள்களுக்கு கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றார் அவர்.
வெயில் நிலவரம்:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 7 இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிபட்சமாக வேலூரில் 103 டிகிரி வெயில் பதிவானது.
வெள்ளிக்கிழமை பதிவான வெயில் அளவு (பாரன்ஹீட்டில்):
வேலூர் - 103, தருமபுரி - 101, சென்னை, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்திவேலூர், கடலூர், தருமபுரி - 100
வேலூர் - 103, தருமபுரி - 101, சென்னை, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்திவேலூர், கடலூர், தருமபுரி - 100
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments