தயவு செய்து இசுலாமிய சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று பாஜக எம்.பி.யும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வேண்டுகோள் விடுத்துள்ளார்...!
அரபு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் குற்றவில் சட்டங்களை இந்தியாவில் நடை முறை படுத்த வேண்டும் என்று பாஜக M.P. யும் நடிகருமான சுரேஷ்கோபி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யபட்டார். இது கேரள மக்களிடையே பெரும் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது காலம் காலமாகவும், ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதுவரைக்கும் அக்குற்றத்திற்கான முறையான தண்டனை வழங்கப்படாததால் ஆயிரக்கணக்கான பெண்கள் இக்குற்றத்திற்கு பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
கேரளாவில் நடைபெற்ற சம்பவமும் இதைதான் எடுத்துக்காட்டுகிறது. கொலை செய்யப்பட்ட மாணவி ஜிஷாவின் தாயரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரபல நடிகரும் பாஜக வின் ராஜ்ய சபை உறுப்பினருமான சுரேஷ் கோபி கூறும் போது:-
இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அரபு நாடுகளின் குற்றவியல் சட்டங்களை நடைமுறை படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார். தற்போது இங்கே நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தினால் இத்தகைய குற்றச்செயலை ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது. இனியும் தாமதிக்காமல் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கான உரிய சட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments