கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பி.பி.எல் ஆட்டத்தில் பங்கெடுத்தபோது ஒரு பெண் வர்ணனையாளரிடம் முறை தவறி பேசியதற்காக கிரிஸ் கெயிலுக்கு 7500 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் மேலும் மற்றொரு பெண் வர்ணனையாளரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசினார். இதனால் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளான கிரிஸ் கெயிலை இம்முறை பி.பி.எஸ் போட்டியில் சேர்க்கப்போவதில்லை என அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தான் அந்த பெண்ணிடன் அன்றே மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், இதை வேண்டுமென்றே பத்திரிகைகள் பெரிதுபடுத்திவிட்டதாகவும் கிரிஸ் கெயில் தெரிவித்தார்.

No comments:
Write comments