இலங்கையில் மழைவெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு மழைபெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 15ஆம் தேதி முதல் பெய்துவரும் மழையால் தலைநகரம் கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள நகரங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பிரதேசங்களில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 70ற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள அரநாயக என்ற மலைப்பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டு ஓடி அருகாமையில் உள்ள கிராமத்து வீடுகளின் மீது விழுந்துள்ளனர். இதில் மொத்தம் 66 வீடுகள் இடிப்பட்டி மண்ணுக்குள் புதைந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் பலர் உயிருடனும், சிலர் பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் 127 பேரை காணவில்லை என்ரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின்சாரமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய கப்பல்கள் இலங்கைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments