நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் இந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாதாக அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். திமுக அதிமுக ஆகிய இருகட்சிகளை கடுமையா சாடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர் தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்றும் தமிழ் நாட்டில் எங்கள் நல்லாட்சியே என்று முழக்கமிட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கெடுத்த சீமான், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பேராசிரியர் அருணனை தகாத வார்தைகளால் திட்டினார், அத்தோடு தனது கட்சியைவிட மக்கள் நலக்கூட்டணி ஒரு வாக்கு அதிகம் பெற்றுவிட்டால் தனது கட்சியை கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுவேன் என சபதம் போட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை மக்கள் நலக்கூட்டணி பெற்றிருக்கிறது. இப்போது சீமான் என்ன செய்யப்போகிறார்? தனது கட்சியை கலைக்கத்த்யாரா..? என கம்யூனிஸ்ட் கட்சியினரும், மக்கள் நலக்கூட்டணியினரும் சமூக வலைத்தளங்களில் சீமானை கடுமையாக சாடி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்கு நாகரீகத்தோடு நிதானமும் வேண்டும், சமூக சிந்தனை கொண்ட பொருளாதார பார்வை கொண்ட சீமான் இவ்வாறு பேசியது பலரையும் முகம் சுழிக்கவைத்தது.

No comments:
Write comments