Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

பணத்திற்கும், பதவிக்காகவுமே அதிமுகவில் இணைகிறார்கள்!


அதிமுகவில் இணைந்தால் பணம், பதவி கிடைக்கும் என்ற ஆசையில் தான் பல கட்சியினருக்கு அங்கு போய் இணைகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பர்கூரில் நடந்த கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் கூறியதாவது, தேமுதிக பல்வேறு சோதனைகளை கடந்து இன்று தமிழகத்தில் முக்கிய கட்சியாக விளங்கி வருகிறது. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். தேமுதிகவிற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.

பயம் இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் இருக்காது. தற்போது தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா பர்கூர் தொகுதியை  பார்த்தால் பயம். அவரை வெற்றி பெற செய்த மற்றும் தோல்வியடைய செய்த இந்த  பர்கூருக்கு ஜெயலலிதா வர பயப்படுகிறார். அதிமுகவில் பல்வேறு கட்சிகளில்  இருந்து வெளியேறி 91 ஆயிரம் பேர் இணைந்ததாக கூறுகின்றனர்.  அனைவரும்  பணம், பதவிக்காக இணைந்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். எத்தனை  இடையூறு வந்தாலும் தேமுதிகவை யாரும் அழிக்க முடியாது. இவ்வாறு விஜயகாந்த்  பேசினார்.  முன்னதாக கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic