Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 29, 2016

கருப்பு பணம் வரும்ம்ம்ம்ம்..... ஆனா வர்ர்ர்ர்ராது....!



அடுத்த மாதம் பிரதமர நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜூன் 4ல் இந்தியாவிலிருந்து புறப்படும் மோடி, ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

ஆப்கானிஸ்தானிற்கு முதலில் செல்லும் மோடி, ரூபாய் 1400 கோடி செலவில் இந்தியாவின் நிதி உதவியோடு ஆப்கானிஸ்தான் அரசு கட்டிக்கொண்டிருக்கும் "சல்மா"நீர் அணையை பார்வையிடுகிறார். அதன் பின்னர் உலகின் முதல் பணக்கார நாடான கத்தாருக்கு பின்னர் சுவிச்சர்லாந்திற்கும் செல்கிறார்.

2 நாட்களி கத்தாரில் தங்கும் பிரதமர் அங்கு கத்தார் சேக் தமீம் பின் ஹம்மாட் அவர்களை சந்தித்து, பொருளாதார உறவுகளை அதிகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். சுவிட்சர்லாந்தில் அந்நாட்டு பிரதமர் செனிடர் அம்மானைச் சந்தித்து இந்தியர்கள் அந்நாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பணம் தொடர்பாக பேசவிருக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அமெரிக்காவிற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பாதுகாப்புத்துறை தொடர்பான கலந்தாலோசனை செய்யவிருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic