Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

தங்களது வாக்கை பதிவு செய்த அரசியல் பிரபலங்கள்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு கூறும்போது இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரிந்துவிடும் என கூறினார்.
கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார். அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது "திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, போதுமான அளவிற்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் லாரிகள் மூலம் வந்த கோடிகள் யாருடையது என்று தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

திமுக பொருளாளர் திரு மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகாவுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

சென்னை மந்தவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் குஷ்பு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார். அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதிமுகவிற்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிக்கொன்டிருக்கின்றனர். 99% பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது அதிமுகதான் என்று கூறினார்.

திண்டிவனத்தில் தனது வாக்கை பதிவு செய்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறும்போது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சின்னாபின்னமாக்கி விட்டனர். இம்முறை வித்தியாசமான தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டளிக்காமல் ஒதுங்கியிருந்த இளைஞர்கள் ஓட்டளிக்க முன் வந்துள்ளனர். மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டுமே முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள் என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic