Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 6, 2016

காயிதே மில்லத் : 121-வது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை



காயிதே மில்லத்தின் 121-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். 

121-வது பிறந்தநாள்:

காயிதே மில்லத்தின் 121-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா பெரிய மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, ராஜலட்சுமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்தனர்.

அ.தி.மு.க. கட்சி சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.பி.க்கள் தம்பித்துரை, அன்வர்ராஜா, செல்வராஜ், எஸ்.ஆர்.விஜயகுமார் ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட தலைவர் கவிஞர் வீரை கறீம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் அ.தி.மு.க. தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


தி.மு.க. - ம.தி.மு.க.:

தி.மு.க. சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் காயல் அபூபக்கர், மா. சுப்பிரமணியன், கு.க. செல்வம், ஜெ. அன்பழகன் மற்றும் ஆர்.எஸ். பாரதி எம்.பி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்.பி. மஸ்தான் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். 

ம.தி.மு.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, சிறுபான்மை பிரிவு தலைவர் முராத் புகாரி, மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ராமதாஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்தனர். பா.ம.க. சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க. - ச.ம.க.:

தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகளும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் இரா.செல்வம் உள்பட நிர்வாகிகளும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவரும், காயிதே மில்லத்தின் பேரனுமான தாவுத் மேகான், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி, இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். 

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic