இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் ஹாமில்டனை குல்கர்னே ஆட்டமிழக்கச் செய்தார். 14 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
நிதானமாக விளையாடிய சிபபா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த சிபந்தா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் அனைவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
31.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த ஜிம்பாப்வே அணி 123 ரன்களுக்குள் மற்ற விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 7 பேர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். சாகல் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து 124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments