ஓமர் மத்தீன் என்பவன் இவ்விடுதிக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 50ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது. அதோடு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் ஒலித்துவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மதுரையில் ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த போஸ்டரில் அடங்கிய வாசகம் ஓரினச்சேர்க்கையாளர்களை கலாச்சார பயங்கரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.என்.எல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Write comments