டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய விமான போக்குவரத்து கொள்கையின் படி, ஒரு மணி நேரத்திற்குள்ளான விமான பயணத்திற்கு கட்டணமாக ரூ.2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் பல பகுதிகளை விமான சேவை மூலம் இணைப்பதற்காகவும் விமான போக்குவரத்து விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒரு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான தூரம் வரையிலான பயணத்திற்கு அதிகபட்சமாக 2500 ரூபாய் கட்டணம் இருக்கும் என கூறப்படுகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments