Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 8, 2016

ஆர்.எஸ்.எஸ் உடை அணிவிக்கப்பட்ட சாமி சிலை - சூரத்தில் பரபரப்பு


பள்ளிக்கூட வளாகத்திற்குள் இருந்த கோயில் சாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காக்கி டிரவுசரை மாட்டி உட்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள கிராமம் லஷ்கனா. இங்கு விடுமுறை கழித்து கடந்த திங்கட்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி வளாகத்தினுல் இருந்த சுவாமிநாராயணன் கோயிலில் இருந்த சாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காக்கி டிரவுசரும், கருப்பு தொப்பியும் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாணவர்கள் வெளியில் தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ஏராளமான பக்தர்கள் பள்ளிக்குள் நுழைய முற்பட்டபோது, பள்ளி காவலாளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு 20ற்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை  இந்த பள்ளிக்கூட வளாகத்தினுள் நடத்தியது. இந்த நிகழ்சியில் பங்கெடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜெயந்தி பாதேஷியா கூறும்போது "சாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஆடைகளை மாற்றவில்லை, அந்த கோயிலில் பூஜாரியாக பணிபுரிந்து வருபவர் தான் சாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் ஆடைகளை அணிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் நடத்திய பயிற்சி முகாமின் இறுதி நாளில் நிகழ்சியின் நினைவாக ஆர்.எஸ்.எஸ் உடுப்புகளை பள்ளி நிர்வாகிகளிடத்தில் வழங்கியதாக கூறப்படுகிறது. இங்கு நடத்பட்ட பயிற்சி முகாமில் 600 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் இறுதி நாளில் அந்த கோயிலின் பூஜாரி சுவாமி விஷ்வா பிராக்ஷிஜி சாமி சிலைக்கு கருப்பு தொப்பி, வெள்ள சட்டை மற்றும் காக்கி டவுசரை அணிவித்தார். திங்கட்கிழை பள்ளி விடுமுறை கழிந்து திறக்கப்பட்டதும், பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாமி சிலையின் புதிய ஆடையை கண்டு அதிர்ச்சியுற்றனர். சிலர் அதனை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

இச்செயலை வன்மையாக கண்டித்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாரத்சிங் சொலான்கி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினர் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்யப்படவேண்டும் என கோரியுள்ளார். சூரத் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கூறும்போது "இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் சுவாமிநாராயண பக்தர்கள் தான். எங்களுடைய மத உணர்வை இது புண்படுத்தியுள்ளது" எனக்கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic