குளிர்சாதன பெட்டியில் உள்ள குறைந்த வெப்பநிலை சில நேரங்களில் உணவுகளில் உள்ள நன்மை தரும் சத்துக்களை அழித்து, நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றி விடுகின்றன.
அதுமட்டுமின்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் உணவுகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும், நாட்கள் செல்ல செல்ல விஷத் தன்மை நிறைந்ததாக கூட மாறிவிடலாம்.
வெங்காயம்:
வெங்காயத்தை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது, ஏனெனில் இது மற்ற காய்கறிகளின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். தேவைப்படும் பட்சத்தில் ஒருநாள் வேண்டுமானால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.
தக்காளி:
தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சில சமயங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதன் சுவையும் மாறக்கூடும்.
உருளைக்கிழங்கு:
குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து தனியே பிரிவதுடன், அது கெட்டியாகவும், இனிப்பு சுவை உடையதாகவும் மாறுகிறது. இதனை தடுக்க அறை வெப்பநிலையிலேயே பேப்பர் பாக்கில் சுற்றி வைக்கலாம்.
தேன்:
தேனின் மென்மையான மற்றும் திரவ அமைப்பு மாறாமல் இருக்கவும், கெட்டியாகாமல் தடுக்கவும் அதனை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.
காபி கொட்டை:
குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் மணத்தைப்போக்க ஒன்றிரண்டு காபி கொட்டைகளை உபயோகிக்கலாம். ஆனால் நாம் அருந்துவதற்காக பயன்படுத்தும் காபி தூளை வைக்ககூடாது, ஏனெனில் இதன் உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கி விடும். எனவே இவற்றை அறை வெப்பநிலையில் மூடப்பட்ட கொள்கலனில் சேமித்து வைத்து பயன்படுத்துவதே சிறந்தது.
பிரட்:
குளிர்சாதன பெட்டியின் உள்ளே பிரட்டை வைப்பதால் அவை காய்ந்தும், கடினமாக மாறியும் பயன்படுத்த முடியாத நிலையை அடையும்.
சாஹிப்...
No comments:
Write comments