இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''சென்னை சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்ட்டின் எனது ஆசிரியை கேத்ரின் சைமன் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கல்வி கற்பிக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்டில் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை அவரது மாணவியாக நான் இருந்தது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். என் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்ரின் சைமன். ஆசிரியை - மாணவி என்ற முறையில் எனக்கும் அவருக்கும் விசேஷமான நல்லுறவை பரிமாறிக் கொண்டோம்.
சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்டில் அவருடன் தொடர்புடைய எல்லா மாணவிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கினார். அவரது கருணையும், உறுதியான நிலைப்பாடும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments