Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

கால்நடை மருத்துவ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி நாள்


கால்நடை மருத்துவத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை - ஜூன் 10) கடைசியாகும் நாள் ஆகும்.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேரடி விண்ணப்ப விநியோக முறையை கால்நடை பல்கலைக்கழகம் ரத்து செய்துவிட்டது.
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்நிலையில் மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்தப் படிப்புகளுக்காக புதன்கிழமை வரை 17,152 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் பேர் இந்தப் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்களை ஜூன் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 17-ஆம் தேதி கடைசியாகும்.
தரவரிசைப் பட்டியல் எப்போது? ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic