மதுராவில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுராக அருகே ஜவஹர்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தபோது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு வாவலாளி உட்பட 29 பேர் கொல்லபட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகிலேஷ் யாதவ் சட்ட ஒழுங்கை காக்க தவறிவிட்டார் எனவும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என பா.ஜ.க கூறிவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பா.ஜ.கவின் தலைவர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என பல்வேறு காரணங்களுக்காக மறுத்துவிட்டது. முதலில் மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் காவல்துறையின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது என்பது நிரூபிக்கப்படவேண்டும். இதெல்லாம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்காக இம்மனுவை பரிசீலிக்க முடியும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

No comments:
Write comments