Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 7, 2016

ஆயி துடைக்க‌ டிரம்ப் பேப்பர் - ஐயய்யே களீஜ்பா....!


அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடு டொனால்ட் டிரம்ப் சீனாவை கடுமையாக சாடியதால் டிரம்பை இழிவுபடுத்தும் விதத்தில் சீனா டிரம்ப் டாய்லட் டிஸ்யூ பேப்பரை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பாளர் உறுதி செய்யும் தேர்தல் ஒவ்வொரு மாகாணத்திலும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. டொனால் டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் பேசி வரும் பேச்சுக்கள் அமெரிக்காவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சர்ச்சையாகி வருகிறது. அவரது பேச்சுக்கு உலகம் முழுவதிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. சமீபத்தில் சீனா அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளை திருடி வருவதாகவும், இதனால் அமெரிக்காவின் லாபம் தடைபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனை முற்றிலுமாக மறுத்த சீனா, டிரம்பை விமர்சிக்கும் விதத்தில் அந்நாட்டு டிஸ்யூ பேப்பர் கம்பெனி ஒன்று டொனால்ட் டிரம்பின் வெவ்வேறு முக பாவனைகளை அடங்கிய டாய்லட் பேப்பரை அச்சடித்து விநியோகம் செய்து வருகிறது. "கிங்கடோ" என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதலே இத்தகைய டாய்லட் டிஸ்யூ பேப்பர்களை விற்பனை செய்து வருவதாகவும், தங்களுக்கு லட்சக்கணக்கான டாலர்களில் மதிப்பிலான வியாபார ஆர்டர்கள் கிடைத்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக அமெரிக்கர்களே அதனை அதிகம் விரும்பி வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
​​

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic